தொடக்கம் | ||
118. திருப்பருப்பதம் - வியாழக்குறிஞ்சி
|
||
1271. |
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்; இடு மணி எழில் ஆனை ஏறலன், எருது ஏறி; விடம் அணி மிடறு உடையான்; மேவிய நெடுங்கோட்டுப் படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே. |
உரை |
1272. |
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில் நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை-உள்கு, மட நெஞ்சே! வாய் புல்கு தோத்திரத்தால், வலம்செய்து, தலைவணங்கி, பாய் புலித்தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே. |
உரை |
1273. |
துனி உறுதுயர் தீரத் தோன்றி ஓர் நல்வினையால் இனி உறுபயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல்! கனி உறு மரம் ஏறிக் கருமுசுக் கழை உகளும், பனி உறு கதிர் மதியான், பருப்பதம் பரவுதுமே. |
உரை |
1274. |
“கொங்கு அணி நறுங் கொன்றைத் தொங்கலன், குளிர்சடையான், எங்கள் நோய் அகல நின்றான்” என, அருள் ஈசன் இடம் ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகு அழித்த பைங்கண் வெள் ஏறு உடையான்-பருப்பதம் பரவுதுமே. |
உரை |
1275. |
துறை பல சுனை மூழ்கி, மலர் சுமந்து ஓடி, மறை ஒலி வாய் மொழியால், வானவர் மகிழ்ந்து ஏத்த, சிறை ஒலி கிளி பயிலும், தேன் இனம் ஒலி ஓவா, பறை படு விளங்கு அருவிப் பருப்பதம் பரவுதுமே. |
உரை |
1276. |
சீர் கெழு சிறப்பு ஓவாச் செய்தவ நெறி வேண்டில், ஏர் கெழு மட நெஞ்சே! இரண்டு உற மனம் வையேல்! கார் கெழு நறுங்கொன்றைக் கடவுளது இடம், வகையால் பார் கெழு புகழ் ஓவா, பருப்பதம் பரவுதுமே. |
உரை |
1277. |
புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ, தொடை புல்கு நறுமாலை திருமுடி மிசை ஏற, விடை புல்கு கொடி ஏந்தி, வெந்த வெண் நீறு அணிவான்- படை புல்கு மழுவாளன்-பருப்பதம் பரவுதுமே. |
உரை |
1278. |
நினைப்பு எனும் நெடுங்கிணற்றை நின்று நின்று அயராதே மனத்தினை வலித்து ஒழிந்தேன்; அவலம் வந்து அடையாமை, கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடைக் கரந்தான்தன்- பனைத்திரள் பாய் அருவிப் பருப்பதம் பரவுதுமே. |
உரை |
1279. |
மருவிய வல்வினை நோய் அவலம் வந்து அடையாமல்,- திரு உரு அமர்ந்தானும், திசைமுகம் உடையானும், இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே. |
உரை |
1280. |
சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர், சமண்குண்டர் மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி, ஒர் பேய்த்தேர்ப் பின் குடம் கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின்! குஞ்சரத்தின் படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே. |
உரை |
1281. |
வெண் செ(ந்) நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான், பண் செலப் பல பாடல் இசை முரல் பருப்பதத்தை, நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன், நல்ல ஒண் சொலின் இவைமாலை உரு எண, தவம் ஆமே. |
உரை |