தொடக்கம் | ||
124. திருவீழிமிழலை - திருவிராகம்
|
||
1337. |
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர் மலி குழல் உமைதனை இடம் மகிழ்பவர், நலம் மலி உரு உடையவர், நகர் மிகு புகழ் நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே. |
உரை |
1338. |
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர் கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில் இருள் அறு மதியினர், இமையவர் தொழுது எழு நிருபமன், மிழலையை நினைய வல்லவரே. |
உரை |
1339. |
“கலைமகள் தலைமகன், இவன்” என வருபவர் அலை மலிதரு புனல், அரவொடு, நகுதலை, இலை மலி இதழியும், இசைதரு சடையினர் நிலை மலி மிழலையை நினைய வல்லவரே. |
உரை |
1340. |
மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர் காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில் நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே. |
உரை |
1341. |
புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை இகழ்வு செய்தவன் உடை எழில் மறைவழி வளர் முகம் அது சிதைதர முனிவு செய்தவன் மிகு நிகழ்தரு மிழலையை நினைய வல்லவரே. |
உரை |
1342. |
அன்றினர் அரி என வருபவர்-அரிதினில் ஒன்றிய திரிபுரம் ஒருநொடியினில் எரி சென்று கொள் வகை சிறு முறுவல்கொடு ஒளி பெற நின்றவன் மிழலையை நினைய வல்லவரே. |
உரை |
1343. |
கரம் பயில் கொடையினர் கடிமலர் அயனது ஒர் சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர், வரம் பயில் கலைபல மறை முறை அறநெறி நிரம்பினர், மிழலையை நினைய வல்லவரே. |
உரை |
1344. |
ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர் அரக்கன் நல்மணி முடி ஒருபதும் இருபது- கரக்கனம் நெரிதர, மலர் அடிவிரல் கொடு நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே. |
உரை |
1345. |
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர் கடிமலர் அயன் அரி கருத(அ)ரு வகை தழல்- வடிவு உரு இயல் பினொடு உலகுகள் நிறைதரு நெடியவன் மிழலையை நினைய வல்லவரே. |
உரை |
1346. |
மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர் வன் மலர் துவர் உடையவர்களும், மதி இலர் துன்மதி அமணர்கள், தொடர்வு அரு மிகு புகழ் நின்மலன் மிழலையை நினைய வல்லவரே. |
உரை |
1347. |
நித்திலன் மிழலையை, நிகர் இலி புகலியுள் வித்தகமறை மலி தமிழ்விரகன மொழி பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு கற்று வல்லவர் உலகினில் அடியவரே. |
உரை |