129. திருக்கழுமலம் - மேகராகக்குறிஞ்சி
 
1383. "சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண்" என்று சிறந்த
                                                             அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள
                                                             கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம் காட்ட, செங்குமுதம் வாய்கள்
                                                             காட்ட,
காவி இருங்கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே.
உரை
   
1384. பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடு உடைய மலைச் செல்வி
                                                             பிரியா மேனி
அருந்தகைய சுண்ணவெண் நீறு அலங்கரித்தான், அமரர் தொழ,
                                                             அமரும்கோயில்
தரும் தடக்கை முத்தழலோர் மனைகள் தொறும் இறைவனது
                                                             தன்மை பாடி,
கருந்தடங்கண்ணார் கழல் பந்து அம்மானைப் பாட்டு அயரும்
                                                             கழுமலமே.
உரை
   
1385. அலங்கல் மலி வானவரும் தானவரும் அலைகடலைக் கடைய, தம்
கலங்க, எழு கடுவிடம் உண்டு இருண்ட மணிகண்டத்தோன் கருதும்
                                                             கோயில்
விலங்கல் அமர் புயல் மறந்து, மீன் சனி புக்கு, ஊன் சலிக்கும்
                                                             காலத்தானும்
கலங்கல் இலா மனப் பெரு வண்கை உடைய மெய்யர் வாழ்
                                                             கழுமலமே.
உரை
   
1386. பார் இதனை நலிந்து, அமரர் பயம் எய்தச் சயம் எய்தும் பரிசு
                                                             வெம்மைப்
போர் இசையும் புரம்மூன்றும் பொன்ற ஒரு சிலை வளைத்தோன்
                                                  பொருந்தும் கோயில்
வார் இசை மென்முலை மடவார் மாளிகையின் சூளிகைமேல்
                                                             மகப் பாராட்ட
கார் இசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு
                                                  எய்தும் கழுமலமே.
உரை
   
1387. ஊர்கின்ற அரவம், ஒளிவிடு திங்களொடு, வன்னி, மத்தம்,
                                                             மன்னும்
நீர் நின்ற கங்கை, நகுவெண்தலை, சேர் செஞ்சடையான் நிகழும்
                                                             கோயில்
ஏர் தங்கி, மலர் நிலவி, இசை வெள்ளிமலை என்ன நிலவி நின்ற,
கார் வண்டின் கணங்களால், கவின் பெருகு சுதை மாடக் கழுமலமே.
உரை
   
1388. "தரும் சரதம் தந்தருள்!" என்று அடி நினைந்து, தழல் அணைந்து,
                                                             தவங்கள் செய்த
பெருஞ் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த
                                                  பெருமான் கோயில்
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப, அது குடித்துக் களித்து
                                                             வாளை,
கருஞ் சகடம் இளக வளர் கரும்பு இரிய, அகம் பாயும் கழுமலமே.
உரை
   
1389. புவி முதல் ஐம்பூதம் ஆய், புலன் ஐந்து ஆய், நிலன் ஐந்து ஆய்,
                                                  கரணம் நான்குஆய்,
அவை அவை சேர் பயன் உரு ஆய், அல்ல உரு ஆய், நின்றான்;
                                                  அமரும்கோயில்
தவம் முயல்வோர் மலர் பறிப்பத் தாழ விடு கொம்பு உதைப்ப,
                                                  கொக்கின் காய்கள்
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர, புள் இரியும்
                                                  கழுமலமே.
உரை
   
1390. அடல் வந்த வானவரை அழித்து, உலகு தெழித்து உழலும்
                                                  அரக்கர்கோமான்
மிடல் வந்த இருபது தோள் நெரிய, விரல் பணிகொண்டோன்
                                                             மேவும் கோயில்
நட வந்த உழவர், "இது நடவு ஒணா வகை பரலாய்த்து" என்று
                                                             துன்று
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே.
உரை
   
1391. பூமகள் தன் கோன், அயனும், புள்ளினொடு கேழல் உரு ஆகிப்
                                                             புக்கிட்டு,
ஆம் அளவும் சென்று, முடி அடி காணா வகை நின்றான் அமரும்
                                                             கோயில்
பா மருவும் கலைப் புலவோர் பல்மலர்கள் கொண்டு அணிந்து,
                                                             பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களி கூர்ந்து நின்று, ஏத்தும் கழுமலமே.
உரை
   
1392. குணம் இன்றிப் புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவம் ஆய்
                                                             நின்று கையில்
உணல் மருவும் சமணர்களும், உணராத வகை நின்றான் உறையும்
                                                             கோயில்
மணம் மருவும் வதுவை ஒலி, விழவின் ஒலி, இவை இசைய
                                                             மண்மேல்-தேவர்
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க, மேல்படுக்கும்
                                                             கழுமலமே.
உரை
   
1393. கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்தன் கழல்மேல்,
                                                             நல்லோர்
நல்-துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன்தான் நயந்து
                                                             சொன்ன
சொல்-துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார், மலராள்
                                                             துணைவர் ஆகி,
முற்று உலகம் அது கண்டு, முக்கணான் அடி சேர முயல்கின்றாரே.
உரை