தொடக்கம் | ||
131. திருமுதுகுன்றம் - மேகராகக்குறிஞ்சி
|
||
1405. |
மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
எண்குணங்களும், விரும்பும் நால்வே- தத்தாலும் அறிவு ஒண்ணா நடை தெளியப் பளிங்கே போல் அரிவை பாகம் ஒத்து, ஆறுசமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்நீர் முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முது குன்றமே. |
உரை |
1406. |
வேரி மிகு குழலியொடு வேடுவனாய்,
வெங்கானில் விசயன் மேவு போரின் மிகு பொறை அளந்து, பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில் காரின் மலி கடிபொழில்கள் கனிகள் பல மலர் உதிர்த்து, கயம் முயங்கி, மூரி வளம் கிளர் தென்றல் திருமுன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே. |
உரை |
1407. |
தக்கனது பெருவேள்வி, சந்திரன், இந்திரன்,
எச்சன், அருக்கன், அங்கி, மிக்க விதாதாவினொடும், விதிவழியே தண்டித்த விமலர் கோயில் கொக்கு, இனிய கொழும் வருக்கை, கதலி, கமுகு, உயர் தெங்கின், குவை கொள்சோலை, முக்கனியின் சாறு ஒழுகிச் சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே. |
உரை |
1408. |
வெம்மை மிகு புரவாணர் மிகை செய்ய; விறல்
அழிந்து, விண் உளோர்கள், செம்மலரோன், இந்திரன், மால், சென்று இரப்ப; தேவர்களே தேர் அது ஆக, மைம் மருவு மேரு விலு, மாசுணம் நாண், அரி எரிகால் வாளி ஆக, மும்மதிலும் நொடி அளவில் பொடிசெய்த முதல்வன் இடம் முதுகுன்றமே. |
உரை |
1409. |
இழை மேவு கலை அல்குல் ஏந்திழையாள் ஒருபால்
ஆய், ஒருபால் எள்காது உழை மேவும் உரி உடுத்த ஒருவன் இருப்பு இடம் என்பர் உம்பர் ஓங்கு கழை மேவு மடமந்தி மழை கண்டு, மகவினொடும் புக, ஒண் கல்லின் முழை மேவு மால்யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே. |
உரை |
1410. |
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த
நாதன் இடம் நல் முத்தாறு வகை ஆரும் வரைப்பண்டம் கொண்டு இரண்டுகரை அருகும் மறிய மோதி, தகை ஆரும் வரம்பு இடறி, சாலி கழுநீர் குவளை சாயப் பாய்ந்து, முகை ஆர் செந்தாமரைகள் முகம்மலர, வயல் தழுவு முதுகுன்றமே. |
உரை |
1411. |
அறம் கிளரும் நால்வேதம் ஆலின் கீழ்
இருந்து அருளி, அமரர் வேண்ட, நிறம் கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்று அறுத்த நிமலர் கோயில் திறம் கொள் மணித்தரளங்கள் வர, திரண்டு அங்கு எழில் குறவர் சிறுமிமார்கள் முறங்களினால் கொழித்து, மணி செல விலக்கி, முத்து உலைப் பெய்முதுகுன்றமே. |
உரை |
1412. |
கதிர் ஒளிய நெடுமுடிபத்து உடைய கடல்
இலங்கையர்கோன் கண்ணும் வாயும் பிதிர் ஒளிய கனல் பிறங்க, பெருங்கயிலைமலையை நிலை பெயர்த்த ஞான்று, மதில் அளகைக்கு இறை முரல, மலர் அடி ஒன்று ஊன்றி, மறை பாட, ஆங்கே முதிர் ஒளிய சுடர் நெடுவாள் முன் ஈந்தான் வாய்ந்த பதி முதுகுன்றமே. |
உரை |
1413. |
பூ ஆர் பொன்தவிசின்மிசை இருந்தவனும்,
பூந்துழாய் புனைந்த மாலும், ஓவாது கழுகு ஏனம் ஆய், உயர்ந்து ஆழ்ந்து, உற நாடி, உண்மை காணாத் தே ஆரும் திரு உருவன் சேரும் மலை செழு நிலத்தை மூட வந்த மூவாத முழங்கு ஒலி நீர் கீழ் தாழ, மேல் உயர்ந்த முதுகுன்றமே. |
உரை |
1414. |
மேனியில் சீவரத்தாரும், விரிதரு தட்டு
உடையாரும், விரவல் ஆகா ஊனிகளாய் உள்ளார் சொல் கொள்ளாது உம் உள் உணர்ந்து, அங்கு உய்மின்,தொண்டீர்! ஞானிகளாய் உள்ளார்கள் நால்மறையை முழுது உணர்ந்து, ஐம்புலன்கள் செற்று, மோனிகளாய் முனிச்செல்வர் தனித்து இருந்து தவம் புரியும் முதுகுன்றமே. |
உரை |
1415. |
முழங்கு ஒலி நீர் முத்தாறு வலம்செய்யும்
முதுகுன்றத்து இறையை, மூவாப் பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்து உடைய கழுமலமே பதியாக் கொண்டு, தழங்கு எரிமூன்று ஓம்பு தொழில்-தமிழ் ஞானசம்பந்தன் சமைத்த பாடல் வழங்கும் இசை கூடும் வகை பாடுமவர் நீடு உலகம் ஆள்வர்தாமே. |
உரை |