தொடக்கம் | ||
135. திருப்பராய்த்துறை - மேகராகக்குறிஞ்சி
|
||
1448. |
நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை கூறு சேர்வது ஒர் கோலம் ஆய், பாறு சேர் தலைக் கையர் பராய்த்துறை ஆறு சேர் சடை அண்ணலே. |
உரை |
1449. |
கந்தம் ஆம் மலர்க்கொன்றை, கமழ் சடை, வந்த பூம்புனல், வைத்தவர் பைந்தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை அந்தம் இல்ல அடிகளே. |
உரை |
1450. |
வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து ஓத நின்ற ஒருவனார்; பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை ஆதி ஆய அடிகளே. |
உரை |
1451. |
தோலும் தம் அரை ஆடை, சுடர்விடு நூலும் தாம் அணி மார்பினர் பாலும் நெய் பயின்று ஆடு, பராய்த்துறை, ஆல நீழல் அடிகளே. |
உரை |
1452. |
விரவி நீறு மெய் சுவர், மேனிமேல்; இரவில் நின்று எரி ஆடுவர்; பரவினார் அவர் வேதம் பராய்த்துறை அரவம் ஆர்த்த அடிகளே. |
உரை |
1453. |
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்; கறை கொள் கண்டம் உடையவர் பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை அறைய நின்ற அடிகளே. |
உரை |
1454. |
விடையும் ஏறுவர்; வெண்பொடிப் பூசுவர்; சடையில் கங்கை தரித்தவர்; படை கொள் வெண்மழுவாளர் பராய்த்துறை அடைய நின்ற அடிகளே. |
உரை |
1455. |
தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை நெருக்கினார், விரல் ஒன்றினால்; பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை அருக்கன் தன்னை, அடிகளே. |
உரை |
1456. |
நாற்ற மாமலரானொடு மாலும் ஆய்த் தோற்றமும் அறியாதவர்; பாற்றினார், வினை ஆன; பராய்த்துறை ஆற்றல் மிக்க அடிகளே. |
உரை |
1457. |
திரு இலிச் சிலதேர், அமண் ஆதர்கள், உரு இலா உரை கொள்ளேலும்! பரு விலால் எயில் எய்து, பராய்த்துறை மருவினான் தனை வாழ்த்துமே! |
உரை |
1458. |
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச் செல்வர்மேல், சிதையாதன செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ், செல்வம் ஆம், இவை செப்பவே. |
உரை |