தொடக்கம் | ||
94. திருஆலவாய் - திருஇருக்குக்குறள்
|
||
1014. |
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார் ஞாலம் ஆள்வரே. |
உரை |
1015. |
ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார் சீலமே சொலீர், காலன் வீடவே! |
உரை |
1016. |
ஆலநீழலார், ஆலவாயிலார், காலகாலனார் பால் அது ஆமினே! |
உரை |
1017. |
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய் பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்மினே! |
உரை |
1018. |
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் பாடியே, மனம் நாடி, வாழ்மினே! |
உரை |
1019. |
அண்ணல் ஆலவாய் நண்ணினான் தனை எண்ணியே தொழ, திண்ணம் இன்பமே. |
உரை |
1020. |
அம் பொன்-ஆலவாய் நம்பனார் கழல் நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே. |
உரை |
1021. |
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய் உரைக்கும் உள்ளத்தார்க்கு, இரக்கம் உண்மையே. |
உரை |
1022. |
அருவன், ஆலவாய் மருவினான்தனை இருவர் ஏத்த, நின்று உருவம் ஓங்குமே. |
உரை |
1023. |
“ஆரம் நாகம் ஆம் சீரன், ஆலவாய்த் தேர் அமண் செற்ற வீரன்” என்பரே. |
உரை |
1024. |
அடிகள் ஆலவாய், படி கொள் சம்பந்தன், முடிவு இல் இன்தமிழ் செடிகள் நீக்குமே. |
உரை |