1475. மாது இலங்கிய மங்கையர் ஆட, மருங்குஎலாம்
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய்,
சோதி அம்சுடர்மேனி வெண்நீறு அணிவீர்! சொலீர்
காதில் அம் குழை சங்கவெண்தோடுஉடன் வைத்ததே?
6
உரை