1538. மேவில் ஒன்றர், விரிவுஉற்ற இரண்டினர், மூன்றும் ஆய்
நாவில் நாலர், உடல் அஞ்சினர், ஆறர், ஏழ் ஓசையர்,
தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார்;
பாவம் தீர்ப்பர், பழி போக்குவர், தம் அடியார்கட்கே.
3
உரை