1577. ஞாலம் முன் படைத்தான் நளிர்மாமலர்மேல் அயன்,
மாலும், காண ஒணா எரியான்; மங்கலக்குடி
ஏல வார்குழலாள் ஒருபாகம் இடம்கொடு
கோலம் ஆகி நின்றான்; குணம் கூறும்! குணம் அதே.
9
உரை