1606. பண்டு ஆலின்நீழலானை, பரஞ்சோதியை,
விண்டார்கள்தம் புரம்மூன்று உடனேவேவக்
கண்டானை, கடி கமழ் கோழம்பம் கோயிலாக்
கொண்டானை, கூறுமின், உள்ளம் குளிரவே!
6
உரை