1759. கொடி கொள் ஏற்றினர், கூற்று உதைத்தவர்,
பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர்,
அடிகள், இந்திரநீலப்பர்ப்பதம்
உடைய வாணர், உகந்த கொள்கையே!
7
உரை