1835. மேவு அயரும் மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி,
பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே.
6
உரை