1837. உரக் கடல்விடத்தினை மிடற்றில் உற வைத்து, அன்று
அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர்
குரக்கு இனம் விரைப் பொழிலின்மீது கனி உண்டு,
பரக்குஉறு புனல் செய் விளையாடு பழுவூரே.
8
உரை