1844. விழிக்கும் நுதல்மேல் ஒரு வெண்பிறை சூடி,
தெழிக்கும் புறங்காட்டுஇடைச் சேர்ந்து எரிஆடி,
பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன், ஊர் பொன்
கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே.
4
உரை