1893. குத்தங்குடி, வேதிகுடி, புனல் சூழ் குருந்தங்குடி,
                                        தேவன்குடி, மருவும்
அத்தங்குடி, தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன்
                                        சடை வைத்து உகந்த
நித்தன், நிமலன், உமையோடும் கூட நெடுங் காலம்
                                        உறைவு இடம் என்று சொல்லாப்
புத்தர், புறம்கூறிய புன் சமணர், நெடும் பொய்களை விட்டு,
                                        நினைந்து உய்ம்மினே!
10
உரை