1950. தையல் ஓர் கூறு உடையான், தண்மதி சேர் செஞ்சடையான்,
மை உலாம் மணிமிடற்றான், மறை விளங்கு பாடலான்,
நெய் உலாம் மூ இலைவேல் ஏந்தி நிவந்து ஒளி சேர்
கை உடையான், மேவி உறை கோயில் கைச்சினமே.
1
உரை