1955. மங்கை ஓர் கூறு உடையான், மன்னும் மறை பயின்றான்,
அங்கை ஓர் வெண்தலையான், ஆடு அரவம் பூண்டு
                                                             உகந்தான்,
திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திருமுடிமேல்
கங்கையினான், மேவி உறை கோயில் கைச்சினமே.
6
உரை