2072. அழல் மல்கும் அங்கையில் ஏந்தி, பூதம் அவை பாட,
சுழல் மல்கும் ஆடலீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்!
எழில் மல்கும் நால் மறையோர் முறையால் ஏத்த,
                                                        இடைமருதில்,
பொழில் மல்கு கோயிலே கோயில் ஆகப் பொலிந்தீரே.
3
உரை