2075. சலம் மல்கு செஞ்சடையீர்! சாந்தம் நீறு பூசினீர்!
வலம் மல்கு வெண்மழு ஒன்று ஏந்தி, மயானத்து ஆடலீர்!
இலம் மல்கு நால்மறையோர் சீரால் ஏத்த, இடைமருதில்,
புலம் மல்கு கோயிலே கோயில் ஆகப் பொலிந்தீரே.
6
உரை