2077. சிலை உய்த்த வெங்கணையால் புரம் மூன்று எரித்தீர்!
                                                    திறல் அரக்கன்
தலைபத்தும் திண்தோளும் நெரித்தீர்! தையல் பாகத்தீர்!
இலை மொய்த்த தண்பொழிலும் வயலும் சூழ்ந்த
                                                    இடைமருதில்,
நலம் மொய்த்த கோயிலே கோயில் ஆக நயந்தீரே.
8
உரை