2154. முள் ஆர் கமலத்து அயன், மால், முடியோடு அடி தேட,
ஒள் ஆர் எரி ஆய் உணர்தற்கு அரியான் ஊர்போலும்
கள் ஆர் நெய்தல், கழுநீர், ஆம்பல், கமலங்கள்,
புள் ஆர் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.
9
உரை