2161. வைத்த நிதியே! மணியே! என்று வருந்தித் தம்
சித்தம் நைந்து, "சிவனே!" என்பார் சிந்தையார்;
கொத்து ஆர் சந்தும், குரவும், வாரிக் கொணர்ந்து உந்தும்
முத்தாறு உடைய முதல்வர்; கோயில் முதுகுன்றே.
5
உரை