2209. ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும், அம் துவர்
                                                       ஆடைச்
சோடைகள், நன்நெறி சொல்லார்; சொல்லினும், சொல்
                                                        அலகண்டீர்!
வேடம் பல பல காட்டும் விகிர்தன், நம் வேதமுதல்வன்,
காடு அதனில் நடம் ஆடும் கண் நுதலான், கடம்பூரே.
10
உரை