2223. வேணுபுரம், பிரமன் ஊர், புகலி, பெரு வெங்குரு,
                                          வெள்ளத்து ஓங்கும்
தோணிபுரம், பூந்தராய், தூ நீர்ச் சிரபுரம், புறவம், காழி,
கோணிய கோட்டாற்றுக் கொச்சைவயம், சண்பை, கூரும்
                                                        செல்வம்
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும்
                                                          ஊரே.
2
உரை