2227. தண் அம் தராய், புகலி, தாமரையான் ஊர், சண்பை, தலை
                                                      முன் ஆண்ட
அண்ணல் நகர், கொச்சைவயம், தண் புறவம், சீர் அணி
                                                       ஆர் காழி,
விண் இயல் சீர் வெங்குரு, நல் வேணுபுரம், தோணிபுரம்,
                                                     மேலார் ஏத்து
கண் நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது
                                                     கருதும் ஊரே.
6
உரை