2231. செழு மலிய பூங் காழி, புறவம், சிரபுரம், சீர்ப் புகலி,
                                                          செய்ய
கொழுமலரான் நன்நகரம், தோணிபுரம், கொச்சைவயம்,
                                                     சண்பை, ஆய
விழுமிய சீர் வெங்குருவொடு, ஓங்கு தராய், வேணுபுரம்,
                                                     மிகு நல் மாடக்
கழுமலம், என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்
                                           நுதலான் கருதும் ஊரே.
10
உரை