2234. திருந்த மதி சூடி, தெண் நீர் சடைக் கரந்து, தேவி பாகம்
பொகுந்தி, பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த
                                                          செல்வர்
இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இனவண்டு
                                                         யாழ்செய்,
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தணசாரல்,
                                                     குறும்பலாவே.
1
உரை