2241. ஏந்து திணி திண்தோள் இராவணனை மால்வரைக்கீழ்
                                                    அடர ஊன்றி,
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம்போலும்
                                                        சாரல்சாரல்,
பூந் தண் நறு வேங்கைக் கொத்து இறுத்து, மத்தகத்தில்
                                                   பொலிய ஏந்தி,
கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே.
8
உரை