2245. பந்து ஆர் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, ஏறு
                                                       அது ஏறி,
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம்
                                                        தண்சாரல்
வந்து ஆர் மடமந்தி கூத்து ஆட, வார் பொழிலில் வண்டு
                                                             பாட,
செந்தேன் தெளி ஒளிர, தேமாங்கனி உதிர்க்கும் திரு
                                                           நணாவே.
1
உரை