2251. கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி, ஆடு அரவு
                                    ஒன்று அரைமேல் சாத்தி,
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த
                                                  கோயில் எங்கும்
நானாவிதத்தால் விரதிகள் நன்நாமமே ஏத்தி வாழ்த்த,
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு
                                                         நணாவே.
7
உரை