2293. உடுத்ததுவும் புலித்தோல்; பலி, திரிந்து உண்பதும்;
கடுத்து வந்த கழல் காலன் தன்னையும், காலினால்
அடர்த்ததுவும்; பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
தொடுத்ததுவும் சரம், முப்புரம் துகள் ஆகவே.
3
உரை