2311. வாக்கியம் சொல்லி, யாரொடும் வகை அலா வகை
                                                 செய்யன்மின்!
சாக்கியம் சமண் என்று இவை சாரேலும்(ம்)! அரணம்
                                                       பொடி
ஆக்கிய(ம்) மழுவாள் படை அண்ணலார் அறையணி
                                                     நல்லூர்ப்
பாக்கியம் குறை உடையீரேல், பறையும் ஆம், செய்த
                                                     பாவமே.
10
உரை