2314. அக்கு அர(வ்)வு அணிகலன் என அதனொடு ஆர்த்தது
                                               ஓர் ஆமை பூண்டு
உக்கவர் சுடுநீறு அணிந்து, ஒளி மல்கு புனல் காவிரிப்
புக்கவர் " துயர் கெடுக!" என பூசு வெண்பொடி மேவிய
மிக்கவர் வழிபாடு செய் விளநகர், அவர் மேயதே.
2
உரை