2318. தேவரும்(ம்), அமரர்களும், திசைகள் மேல் உள தெய்வமும்,
யாவரும்(ம்) அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார்;
மூவரும்(ம்) இவர் என்னவும், முதல்வரும்(ம்) இவர்
                                                        என்னவும்,
மேவ(அ)ரும் பொருள் ஆயினார்; மேயது விளநகர் அதே.
6
உரை