2321. கை இலங்கிய வேலினார், தோலினார், கரி காலினார்,
பை இலங்கு அரவு அல்குலான் பாகம் ஆகிய பரமனார்,
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார்,
மெய் இலங்கு வெண் நீற்றினார், மேயது விள நகர் அதே.
9
உரை