2332. தந்தை, தாய், தன்னுடன் தோன்றினார், புத்திரர், தாரம்,
                                                         என்னும்
பந்தம் நீங்காதவர்க்கு, உய்ந்துபோக்கு இல் எனப்
                                                      பற்றினாயே?
வெந்த நீறு ஆடியார், ஆதியார், சோதியார், வேத கீதர்,
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
                                                அஞ்சல், நெஞ்சே!
9
உரை