2338. இறை நின்று இலங்கு வளையாள் இளையாள் ஒருபால்
                                                     உடையார்,
மறை நின்று இலங்கு மொழியார், மலையார், மனத்தின்
                                                     மிசையார்
கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர் மயானம்
                                                   அமர்ந்தார்;
பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான்
                                                      அடிகளே
4
உரை