2366. அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன்,
நல்ல செந்தமிழ் வல்லவன், ஞானசம்பந்தன்,
எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.
11
உரை