2378. சடை இடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம், வளர்
                                          திங்கள் கண்ணி, அயலே
இடை இடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை,
                                 இறைவன்(ன்) இடம் கொள் பதிதான்
மடை இடை வாளை பாய, முகிழ் வாய் நெரிந்து மணம்
                                             நாறும் நீலம் மலரும்,
நடை உடை அன்னம் வைகு, புனல் அம் படப்பை
                                        நனிபள்ளி போலும்; நமர்கா
2
உரை