2379. பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல்
                                          ஒழிபாடு இலாத பெருமான்,
கறுமலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை, இடம் ஆய
                                                   காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு
                                          போது அலர்ந்த விரை சூழ்
நறுமலர் அல்லி பல்லி, ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி
                                                  போலும்; நமர்கா
3
உரை