2387. கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி
                                                     என்று கருத,
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி
                                              ஆன ஞானமுனிவன்,
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்
                                        இசையால் உரைத்த பனுவல்,
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க, வினை
                                           கெடுதல் ஆணை நமதே.
11
உரை