2404. உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம்
                      உணர்வு ஆக்கும்; உண்மை உலகில்
குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும்; நெஞ்சில்
                               நிறைவு ஆற்றும்; நேசம் வளரும்
மறை வளர் நாவன், மாவின் உரி போர்த்த மெய்யன்,
                               அரவு ஆர்த்த அண்ணல், கழலே
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற
                               திரு நாரையூர் கைதொழவே.
6
உரை