2405. தனம் வரும்; நன்மை ஆகும்; தகுதிக்கு உழந்து வரு திக்கு
                                                   உழன்ற உடலின்
இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று, நினைவு
                                             ஒன்று சிந்தை பெருகும்
முனம் ஒரு காலம், மூன்று புரம் வெந்து மங்கச் சரம் முன்
                                                  தெரிந்த, அவுணர்
சினம் ஒரு கால் அழித்த, சிவன் மேய செல்வத் திரு
                                             நாரையூர் கைதொழவே.
7
உரை