2408. மிடை படு துன்பம் இன்பம் உளது ஆக்கும்; உள்ளம்
                               வெளி ஆக்கும்; முன்னி உணரும்,
படை ஒரு கையில் ஏந்திப் பலி கொள்ளும் வண்ணம் ஒலி
                                               பாடி ஆடி பெருமை!
உடையினை விட்டு உளோரும், உடல் போர்த்து
                     உளோரும், உரை மாயும் வண்ணம் அழிய,
செடி பட வைத்து, உகந்த சிவன் மேய செல்வத் திரு
                                             நாரையூர் கைதொழவே.
10
உரை