2415. கணிகை ஒர் சென்னி மன்னும், மது வன்னி கொன்றை
                               மலர் துன்று செஞ்சடையினான்;
பணிகையின் முன் இலங்க, வரு வேடம் மன்னு பல ஆகி
                                                     நின்ற பரமன்;
அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருள்
                                              ஆன ஆதி அருளான்
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில்
                                                   நம்பன் அவனே.
6
உரை