2420. கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன்,
                                                      முந்தி உண
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில்
                                                  நம்பன் அவனை,
ஈனம் இலாத வண்ணம், இசையால் உரைத்த தமிழ் மாலை
                                                 பத்தும் நினைவார்
வானம் நிலாவ வல்லர்; நிலம் எங்கும் நின்று வழிபாடு
                                                  செய்யும், மிகவே.
11
உரை