2439. சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர்
                                                           ஏத்த,
ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும்;
பார், கொள் விண், அழல், கால், நீர், பண்பினர்
                                                பால்மொழியோடும்,
கூர் கொள் வேல் வலன் ஏந்தி, கொச்சைவயம்
                                                      அமர்ந்தாரே.
9
உரை