2460. தக்கன் வேள்வியைத் தகர்த்தோன்; தனது ஒரு
                                        பெருமையை ஓரான்;
மிக்கு மேல் சென்று மலையை எடுத்தலும், மலைமகள்
                                                          நடுங்க,
நக்கு, தன் திரு விரலால் ஊன்றலும், நடு நடுத்து அரக்கன்
பக்க வாயும் விட்டு அலறப் பரிந்தவன்; பதி மறைக்காடே.
8
உரை