2478. பண்டு நாம் செய்த வினைகள் பறைய, ஓர் நெறி அருள்
                                                       பயப்பார்;
கொண்டல் வான்மதி சூடி; குரை கடல் விடம் அணி
                                                        கண்டர்
வண்டு மா மலர் ஊதி மது உண, இதழ் மறிவு எய்தி
விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று
                                                    அமர்ந்தாரே.
4
உரை