2479. சுழித்த வார் புனல் கங்கை சூடி, ஒர் காலனைக் காலால்
தெழித்து, வானவர் நடுங்கச் செற்றவர்; சிறை அணி பறவை
கழித்த வெண்தலை ஏந்தி; காமனது உடல் பொடி ஆக
விழித்தவர் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று
                                                      அமர்ந்தாரே.
5
உரை